
செய்திகள் மலேசியா
இரு மாதங்களில் 16 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வரும்: பிரதமர் தகவல்
புத்ராஜெயா:
அடுத்த இரு மாதங்களில் மலேசியாவுக்கு 16 மில்லியன் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளைத் தருவிப்பது அதிகரித்துள்ளதால் தினந்தோறும் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கு எட்டப்படும் என்றும் பின்னர் அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார் என அஸ்ட்ரோ அவானி கூறியுள்ளது.
எனினும் என்னென்ன தடுப்பூசிகள் இதில் அடங்கும் என்பதை பிரதமர் குறிப்பிடவில்லை. தடுப்பூசி போடும் திட்டம் இந்த அளவு வெற்றி பெற அரசாங்கத்தின் திட்டமிடலும் முன்களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தியாகமும்தான் முக்கியக் காரணம் என்றார் பிரதமர்.
தடுப்பூசி போடும் திட்டத்திற்காகப் பாடுபடும் மருத்துவர்கள், தாதியர், தடுப்பூசி செலுத்துவோர் உள்ளிட்ட அனைவரது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், மலேசிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதை இவர்கள் அனைவரும் உறுதி செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி திட்டம் சுமூகமாக செயல்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்குவதாக குறிப்பிட்ட அவர், சில பலவீனங்கள் இருப்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாகவும் அவற்றைக் களைந்து இத் திட்டம் அடுத்தடுத்து முன்னேற்றம் காணும் என்றும் கூறினார்.