நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றை கண்டறிய கோலாலம்பூரில் இலவச பரிசோதனை: டான்ஸ்ரீ அனுவார் மூசா

கோலாலம்பூர்:

கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில்  கோவிட் 19 தொற்றைக் கண்டறிவதற்கான இலவசப் பரிசோதனை கோலாலம்பூரில் நடத்தப்படுகிறது. இன்று முதல் இந்தப் பரிசோதனைகள் தொடங்கும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

அதிகமானோர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இந்தப் பரிசோதனை அதிக அளவில் நடத்தப்படும் என்றார் அவர்.

நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை தவிர, அடுத்த வாரம் முதல் சில பகுதிகளில் நடமாடும் தடுப்பூசி போடும் நடவடிக்கையும் தொடங்கும் என அமைச்சர் அன்வார் மூசா தெரிவித்தார்.

இந்த இலவச நோய் கண்டறியும் பரிசோதனை நடவடிக்கை பண்டார் துன் ரசாக்கில் உள்ள நான்கு பொது வீடமைப்பு, அடுக்குமாடி மண்டபங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.

"நடமாடும் தடுப்பூசி போடும் நடவடிக்கையின் மூலம் மூத்த குடிமக்கள் பயனடையலாம். நீங்கள் மூத்த குடிமகன் என்றாலோ, எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர் என்றாலோ நேரடியாக வந்து ஊசி போட்டுக் கொள்ளலாம். இதற்காக முன்பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.

"மலேசியாவில் இன்றைய நிலவரப்படி 100 விழுக்காடு முன்பதிவை எட்டிப் பிடித்த நகரம் புத்ராஜெயாதான். மந்தை நோயெதிர்ப்பு சக்தியை எட்டிப் பிடிக்கும் முதல் மாநிலமாக தலைநகர் கோலாலம்பூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசங்கள் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்," என்றார் டான்ஸ்ரீ அனுவார் மூசா.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset