
செய்திகள் மலேசியா
இன்று மலேசியாவில் கோவிட் -19 தொற்றுகள் 6,241. சிலாங்கூர் 2,178
கோலாலம்பூர்:
இன்று மலேசியாவில் கோவிட் -19 தொற்றுகள் 6,241 பதிவாகி இருக்கின்றது. இன்றும் சிலாங்கூர் 2,178 தொற்றுப் பதிவுகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மே 30 க்குப் பிறகு இன்றுதான் தொற்று எண்ணிக்கை 6,000 களில் குறைந்து இருக்கிறது.
600 தொற்றுகளுடன் சரவாக் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜோகூர் (565 பேர்), நெகிரி செம்பிலன் (556 பேர்), கோலாலம்பூர் (415 தொற்றுகள்), சபா (305 தொற்றுகள்), பினாங்கு (271 பேர்), கிளந்தான் (271 பேர்), மலாக்கா (225 பேர்) மற்றும் லாபுவான் (212 பேர்). பேராக் 174, கெடா 125, புத்ரா ஜெயா 30
பெர்லிஸ் இரண்டு பேர். வழக்கம்போல் இன்றும் மிகவும் குறைவான தொற்று பதிவு செய்திருக்கிறது.