
செய்திகள் மலேசியா
தனிமைப்படுத்திக் கொண்டார் ஹிஷாமுதீன் ஹுசைன்
புத்ராஜெயா:
பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹஷாமுதீன் ஹுசைன் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஒருவரைச் சந்தித்ததால் SOPகளைப் பின்பற்றி அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை ஆசியான்-சீனா இடையேயான சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் ஹிஷாமுதின் ஹுசேன் பங்கேற்க இருந்தார்.
அண்மையில் சீனப் போர் விமானங்கள் மலேசிய வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சரும் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் அப்போது அவருடன் ஹிஷாமுதீன் ஹுசேன் அண்மைய சர்ச்சை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பதில் வெளியுறவு துணை அமைச்சர், கமாருதீன் ஜபா பங்கேற்க உள்ளார்.