நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் எதிரிகளுடனும் இணைந்து பணியாற்றத் தயார்: அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்:

அனைவருடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் தனது முன்னாள் எதிரிகளும் இதில் அடங்குவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எனினும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இவ்வாறு செயல்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சில எதிரிகளுடன் இதற்கு முன்பு இணைந்து பணியாற்றி உள்ளோம். அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பின்னாட்களில் கைவிடப்படக்கூடாது," என்றார் அன்வார்.

தமது பெஜுவாங் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்கத்தான் நேசனல் அல்லது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிகளுடன் இணைந்து செயல்படாது என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அண்மையில் அறிவித்திருந்தார். அதையடுத்து அன்வார் இக் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

பக்காத்தான் ஹரப்பான் ஆட்சிக் காலத்தில் தமக்கு அடுத்து அன்வர் பிரதமராக பொறுப்பேற்க மகாதீர் அனுமதிக்கவில்லை என்று அன்வார் முன்னர் கூறியிருந்தார்.

"ஜசெக, அமானா உள்ளிட்ட கட்சிகளுடன் கெ அடிலான் கட்சியினர் நெருக்கமாக உறவுகளைப் பேண வேண்டும். நம்மைப் பிரிக்கக் கூடிய சிறு கருத்து வேறுபாடுகள் அல்லது கருத்துகளுக்கு இடமளிக்கக்கூடாது. எத்தகைய கருத்து வேறுபாடுகளாக இருந்தாலும் அவை விவாதிக்கப்பட வேண்டும். மாறாக யாரும் யார் மீதும் திணிக்கக்கூடாது.

"கடந்த கால துரோகங்களால் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார் அன்வார்.
நாட்டு மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதையும், நாடு நன்றாக இருப்பதை உறுதி செய்யவும் அனைவரும் குழுவாக இருந்து செயல்பட வேண்டும்" என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset