நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகப் பணியாளர்களுக்கு புதன்கிழமையிலிருந்து தடுப்பூசிகள் போடப்படும்: கைரி

கோலாலம்பூர்:

ஊடகப் பணியாளர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து தடுப்பூசிகள் போடப்படும் என அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தங்கள் பெயரைப் பதிந்துள்ள ஊடகப் பணியாளர்கள் புதன்கிழமையன்று தங்களுக்கான முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும் என அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று முதல் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நேர முன்பதிவு ஊடகப் பணியாளருக்குத் தொடங்கும் என்று குறிப்பிட்ட அவர், எத்தனை பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வர்கள் என்பதற்கான எண்ணிக்கை தற்போது இல்லை என்றார்.

ஊடகத் துறையைச் சார்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு ஜூன் மாதம் நடைபெறும் என்று கடந்த மாதம் அமைச்சர் கைரி தெரிவித்திருந்தார்.

அதையடுத்து புதன்கிழமை முதல் தடுப்பூசி போடப்படுவதை அவர் இன்று உறுதி செய்தார்.
இதற்கிடையே கே.எல்.சி.சி.யில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் இன்று அதற்கான பணிகள் சுமூகமாக நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போடுவதற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் மூத்த குடிமக்களுக்கும் மனநிறைவை அளித்திருப்பதாக அமைச்சர் கைரி தெரிவித்தார்.

"இக்குறிப்பிட்ட மையத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கப்படும். அநேகமாக 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்படலாம். எனினும் தடுப்பூசி போடும் நடவடிக்கை எந்த அளவு சுமூகமாக நடைபெறுகிறது என்பதைப் பொறுத்தே எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படும்," என்றார் அமைச்சர் கைரி.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset