செய்திகள் மலேசியா
முதலாளிமார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது: குடிநுழைவுத் துறை விளக்கம்
கோலாலம்பூர்:
சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே குடிநுழைவுத் துறை நடவடிக்கை எடுப்பதாக எழுந்துள்ள புகாரை அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஸைமி தாவூத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். முதலாளிமார்கள் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 1,052 முதலாளிமார்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், குடிநுழைவு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இத்தகைய வழக்குகளின் மூலம் 19.3 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
"கடந்தாண்டு 519 முதலாளிமார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை அடங்கும். கடந்த மாதத்தில் மட்டும் 130 முதலாளிமார்களுக்கு 3.2 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்றார் கைருல்.
எனவே முதலாளிமார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும், சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவதும் அறவே உண்மையற்ற கூற்றுகள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
