
செய்திகள் மலேசியா
இதுவரை சிலாங்கூருக்கு 600,000 கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கிடைத்துள்ளன; ஆனால் மாநிலம் முழுவதும் 6.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர்: சிலாங்கூர் சுல்தான்
கோலாலம்பூர்:
ஆரம்பத்தில் கூறப்பட்ட 2.9 மில்லியனுக்கு பதிலாக, மத்திய அரசு இதுவரை 600,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகளை சிலாங்கூருக்கு அனுப்பியுள்ளது என்று சிலாங்கூர் சுல்தான் இன்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தற்போது சிலாங்கூருக்கு ஏற்கனவே கிடைத்த கோவிட் -19 தடுப்பூசிகளின் அளவு மாநிலத்தின் மக்கள் தொகை அளவின் அடிப்படையில் “நியாயமற்றது” என்றார்.
கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு Covit-19 Immunization Task Force (CIDF) ஜூன் 1, 2021 வரை, சிலாங்கூருக்கு 615,210 டோஸ் கோவிட் -19 தடுப்பூசி மட்டுமே கிடைத்தது என்பதை உறுதிப்படுத்தியபோது, அவரது மாட்சிமை அதிர்ச்சியடைந்ததாக கூறினார். இது முன்பு கூறப்பட்டபடி 2.9 மில்லியன் டோஸ் அல்ல.
சிலாங்கூரில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களின் மொத்த மக்கள்தொகையுடன் தற்போது 6.5 மில்லியன் எண்ணிக்கையிலான தடுப்பூசி அளவுகளின் விகிதம் சமநிலையில் இல்லை; மேலும் அது நியாயமற்றது என்று அவரது மாட்சிமை மேலும் வலியுறுத்தியது, இதனை மாநில ஆட்சியாளர் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவரது தனிச் செயலாளர் டத்தோ முஹம்மத் முனீர் பானி கூறி இருக்கிறார்.
மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் மாநிலமே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும், இந்த மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் சுட்டிக்காட்டி இருக்கிறார்.