நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய கடற்பகுதிக்குள் ஊடுருவிய சீன கடற்படை கப்பல்

கோலாலம்பூர்:

சீனக் கடலோரக் காவல்படை கப்பல் மலேசிய கடற்பகுதிக்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி இந்த ஊடுருவல் நிகழ்ந்தது என்பதை மலேசிய கடற்படை முகைமை உறுதி செய்துள்ளது.

மிரி கடற்பகுதியில் இருந்து 84 கடல் மைல் தூரத்தில் Beting Patinggi Ali கடற்பகுதியில் சீனக் கப்பல் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையின் மிரி தலைவர் கேப்டன் முஹம்மத் பவுசி ஓத்மான் (Md Fauzi Othman) இதுகுறித்து கூறுகையில், கடந்த ஜூன் 4ஆம் தேதி ஒரு கப்பல் மலேசிய கடற்பரப்பிற்குள் ஊடுருவியது தொடர்பாக தகவல் கிடைத்தது என உறுதி செய்தார்.

அரச மலேசிய கடற்படையும் இதர கண்காணிப்பு ஏற்பாடுகள் வழியும் நிலைமையை நுணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

நாட்டின் இறையாண்மையை உறுதி செய்யும் வகையில் Beting Patinggi Ali கடற்பகுதியில் ஆண்டு முழுவதும் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் மலேசிய வான்பரப்புக்குள் சீனப் போர் விமானங்கள் ஊடுருவிய சில தினங்களில் சீனக் கடற்படையும் அத்துமீறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்சீனக் கடலில் Beting Patinggi Ali பகுதியில் சீனக் கடலோரக் காவல்படை கப்பல்கள் அடிக்கடி தென்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset