செய்திகள் மலேசியா
மலேசிய கடற்படை மாலுமிகள் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு
புத்ராஜெயா:
மலேசிய கடற்படை மாலுமிகளை கொரோனா கிருமி தொற்றியுள்ளது. கடற்படைக்குச் சொந்தமான மஹாவாங்சா கப்பலில் இம்மாலுமிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் 98 மாலுமிகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று உறுதி செய்துள்ளார். அதேவேளையில் மாலுமிகளுக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் தற்போது சமூக அளவிலும் கிருமித் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொற்றுத் திரள்களுடன் சம்பந்தப்படாத அல்லது தொடர்பில்லாத தொற்றுகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்புது கவலை அளிப்பதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியிருந்தது.
இந் நிலையில் 98 மாலுமிகளுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
"ஒருவேளை அவர்கள் பணிக்குப் புறப்படும் முன்னர் தங்கள் வீட்டில் இருந்தபோது அல்லது கடைகளுக்குச் சென்று திரும்பியபோது தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு," என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்.
இந் நிலையில் கப்பலுக்குச் சென்று சில தினங்கள் பணியாற்றிய பின்னர் மாலுமிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனினும் கப்பலுக்குச் செல்லும் முன்னர் அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
"அப்போது மாலுமிகளிடம் தொற்று அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. தற்போது கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அம் மாலுமிகளுக்கு பத்து தினங்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்," என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
