நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் ICU-வில் 905 பேர் அனுமதி: சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும்  தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது 905 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 453 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே 28ஆம் தேதி நாடு முழுவதும் 808 கொரோனா நோயாளிகள்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் இன்று வரை நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தபடியே இருந்து இன்று 905 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருவதாக அதன் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறிவந்தார்.

குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். அதற்கேற்ப தினந்தோறும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset