
செய்திகள் மலேசியா
கொரோனா UPDATE: புதிதாக 6,239 பேர் பாதிப்பு; 75 பேர் பலி
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 6,239 பேருக்கு கிருமி தொற்றியிருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 622,891 ஆக கூடியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,611ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 7,386 பேர் கொரோனா பிடியிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 548,705 ஆகும்.
வழக்கம்போல் இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2291 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெகிரி செம்பிலானில் 501 பேரும் ஜொகூரில் 468 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகவே, பொதுமக்கள் கூடுமானவரை காரணமின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அந்த அமைச்சு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.