
செய்திகள் மலேசியா
லாபுவானை திணறடிக்கும் கொரோனாவின் டெல்டா திரிபு
விக்டோரியா:
லாபுவானில் கிருமித்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக அதன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தற்போது அங்கு உருமாறிய கொரோனாவின் டெல்டா திரிபு வேகமாகப் பரவி வருவதாக லாபுவான் சுகாதார இயக்குநர் கூறியுள்ளார்.
அண்மைய சில தினங்களாக லாபுவானில் தினந்தோறும் 3 இலக்கங்களில் கிருமித்தொற்று பதிவாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை 191 பேருக்கு புதிதாக கிருமி தொற்றிய நிலையில் 7 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இன்று மேலும் 200 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5352ஆக அதிகரித்துள்ளது.
முன்பு நாள்தோறும் 800 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அத்தியாவசியச் சேவை அளிக்கும் துறைகளைச் சார்ந்த சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்டா கொரோனா திரிபு சமூக அளவில் பரவியுள்ளதால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. மேலும் கொரோனாவின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் கடுமையாக உள்ளன. பெருநாள் கொண்டாட்டத்தின்போது மக்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததும் தொற்றுப் பரவல் அதிகரிக்க ஒரு காரணமாகி விட்டது," என்று லாபுவான் சுகாதார இயக்குநர் Dr Ismuni Bohari தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm