
செய்திகள் மலேசியா
முகக் கவசம் அணியாத தாஜுதீன் அப்துல் ரஹ்மானுக்கு 1500 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்:
அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முகக்கவசம் அணியாத காரணத்துக்காக 'பிரசாரனா மலேசியா'வின் முன்னாள் தலைவர் தாஜுதீன் அப்துல் ரஹ்மானுக்கு 1500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக் கொண்டது தொடர்பாக கடந்த மே 25ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தாஜுதீன் கலந்து கொண்டார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதில் அவர் 'பிரசாரனா மலேசியா' தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் முகக்கவசம் அணியாதது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் அவருக்கு 1500 மலேசிய ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டதை டாங் வாங்கி காவல்துறை தலைவர் ஓர் அறிக்கையில் உறுதிசெய்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த செய்தியாளர் சந்திப்பின்போது முகக்கவசம் அணியாத நிலையில் ஃபேஸ் ஷீல்டு (face Shield) அணிந்திருந்தார் தாஜுதீன். இதையடுத்து அவரது இச் செயல் குறித்து பலரும் விமர்சித்தனர்.