நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியாவின் 'ஸ்குவாஷ் அரசி' டேவிட் நிகோல் வாழ்க்கை திரைப்படமாகிறது

கோலாலம்பூர்:

தமது வாழ்க்கை திரைப்படமாவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை டத்தோ நிக்கோல் டேவிட் தெரிவித்துள்ளார்.

எட்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த மலேசியாவின் ஸ்குவாஷ் அரசியான இவரது வாழ்க்கை 'I am Nichole David' என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதை மலேசியாவின் ACE பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முழுக்க ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் இதில் நிக்கோல் டேவிட் கதாபாத்திரத்தில் நடிக்க மலேசியாவிலேயே பொருத்தமான நடிகை தேடப்பட்டு வருகிறார். தற்போது திரைக்கதைக்கு வடிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் தமது சொந்த வாழ்க்கை குறித்து எல்லோருக்கும்  சொல்லவேண்டும் என்ற கனவு தமக்கு எப்போதுமே இருந்து வந்துள்ளதாக கூறுகிறார் நிக்கோல் டேவிட்.
வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தாம் சாதித்தவற்றை முன்மாதிரியாகக் கொண்டு கடுமையாக உழைக்கவேண்டும் என தாம் விரும்பியதாகவும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது சுயசரிதை திரைப்படமாவது ஒருவித சிலிர்ப்பும் உற்சாகமும் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

37 வயதான நிக்கோல் டேவிட் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2 தசாப்தங்களாக நீடித்த அவரது விளையாட்டு உலக வாழ்க்கையில் அவர் உலகின்  முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தார். இதுவரை 5 முறை பிரிட்டிஷ் கிண்ணம், 2 முறை காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள், 5 முறை ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கங்கள், உலகப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளார் நிக்கோல் டேவிட்.
மேலும் 8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், 2006 முதல் 2015 வரையிலான 9 ஆண்டுகளுக்கு உலகின் முதல்நிலை  ஸ்குவாஷ் வீராங்கனையாகத் திகழ்ந்து மலேசியாவுக்குப் பெருமை சேர்த்தார்.

இந்தச் சாதனையாளரின் வாழ்க்கையும் அவர் படைத்துள்ள சாதனைகளும் இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் படைப்பாக  இருக்கும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஏராளமானோர்டத்தோ நிக்கோல் டேவிட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

'நம்பிக்கை'யும் வாழ்த்துகிறது!

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset