நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொந்தமாக தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்தும் சிலாங்கூர் மாநிலம்

கோலாலம்பூர்:

சிலாங்கர் மாநில அரசாங்கம்  அம் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக தடுப்பூசி போடுவது என முடிவு செய்துள்ளது.

இந்த இந்த சொந்த தடுபற்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைபெற்று வருவதாக மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்..

சிலாங்கூர் மாநிலத்திற்கென கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு மாநில அரசு உரிய தொகையை ஒதுக்கி உள்ளது. மேலும் தடுப்பூசி திட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்தவும் 20 கோடி மலேசிய ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார் சிலாங்கூர் மந்திரிபெசார்.

தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்தும்போது மூத்தவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், உற்பத்தி- சேவை துறைகளைச் சார்ந்தவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் 18 வயதான இளைய தலைமுறையினருக்கும் தடுப்பூசி போடும் வகையில் அவை கொள்முதல் செய்யப்படும் என்றும் சிலாங்கூர் அரசு கூறியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 82 ஆயிரம் குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகி இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், குழந்தைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர் என்றார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி வாய்ந்த 250,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மந்திரிபெசார், அவர்களுக்கு இரு தவணைகள் செலுத்தும் வகையில்  5 லட்சம் தடுப்பூசிகளைத் தருவிப்பதற்கு ஏற்ப, தடுப்பூசி உற்பத்தியாளரிடம் ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset