செய்திகள் விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் சக்கரி
பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்குடன் மோதிய கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
ரோலண்ட் கேரோசில் நேற்று நடந்த கால் இறுதியில் போலந்தின் ஸ்வியாடெக்குடன் (20 வயது, 8வது ரேங்க்) மோதிய சக்கரி (25 வயது, 17வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப் போட்டி 1 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் வீராங்கனை என்ற பெருமை சக்கரிக்கு கிடைத்துள்ளது. பிரெஞ்ச் ஓபனில் இதற்கு முன் அவர் 3ஆவது சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்கிய ஸ்வியாடெக் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 9:39 am
அர்ஜெண்டினா ஜெர்சியை நினைத்து ஏங்குவதாக மெஸ்ஸி ஒப்புக்கொண்டார்
October 8, 2026, 9:37 am
மெஸ்ஸியின் கால்பந்து மரபுக்கு ரொனால்டோ மரியாதை செலுத்துகிறார்
October 7, 2026, 4:40 pm
கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: கடைசி ஆட்டத்திலும் கோல்
October 7, 2026, 9:20 am
இங்கிலாந்து அணிக்காக 125ஆவது ஆட்டத்தில் களமிறங்கிய ஹாரி கேய்ன் இரண்டு கோல்களுடன் கொண்டாடினார்
October 7, 2026, 8:51 am
ஜேசுஸ் மீதான ஏமாற்றம் இருந்தபோதிலும் ரொனால்டோ போர்த்துகல் அணிக்கு விசுவாசமாக இருக்கிறார்
October 6, 2026, 9:17 am
தோல்வியடையாத பயணம் ஹரிமாவ் மலாயா அணிக்கு உத்வேகத்தை அளிக்கிறது
October 6, 2026, 9:14 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
October 5, 2026, 12:28 pm
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
