நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய செயல்பாட்டு மன்றம் (National operations council) அமைப்பது சரிபட்டு வராது: பிரதமரின் முதன்மை தனிச்செயலாளர் கருத்து

கோலாலம்பூர்:

தேசிய செயல்பாட்டு மன்றம் (National operations council) அமைப்பது என்பது தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானதாக இருக்காது என பிரதமரின் முதன்மை தனிச்செயலாளர் டத்தோ மர்ஸுகி முஹம்மது (Marzuki Mohamad) தெரிவித்துள்ளார்.

அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு மன்றத்தை மாமன்னர் அமைக்கவேண்டும் எனும் கோரிக்கை தற்போது பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டத்தோ மார்சுகி, இத்தகைய முடிவு பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

"அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், தொழில்துறையினர்,  பொதுமக்கள் என அனைவரும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சுகாதாரா மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெளிக்கொண்டுவர அளித்துவரும் பங்களிப்பும் அரசாங்கம் செயல்படுத்திவரும் திட்டங்களும் பாதிக்கப்படும் வாய்ப்புண்டு.  

"அவசரநிலை 2021 பிரகடனத்தை அறிவித்தபோது மலேசியா அனைத்து அதிகாரங்களும் கொண்ட ராணுவ ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்திருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம்தான் தற்போது இயங்கி வருகிறது. மேலும் மக்கள் அரசாங்கத்துக்குரிய அனைத்து அம்சங்களும் இந்த அவசரநிலைக் காலத்தின்போது தற்காக்கப்பட வேண்டும்," என்றும் டத்தோ மார்சுகி தெரிவித்துள்ளார்.

அவசர நிலை மேலாண்மை தொடர்பாக அவர் பேசிய காணொளி ஒன்று முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளது.

"கடந்த 1969ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது இனக்கலவரத்தால் வன்முறை வெடித்தது. அதன் காரணமாக ஏராமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் அப்போது நிலவிய சூழ்நிலையும், இப்போதும் நிலவும் சூழ்நிலையும் முற்றிலும் வித்தியாசமானவை.

"தற்போதுள்ள சுகாதார நெருக்கடியைக் கையாள்வதற்கு செயல்பாட்டில் உள்ள ஓர் அமைச்சரவை மலேசியாவில் உள்ளது. ஆனால், இது பாதுகாப்பு அவசரநிலை உள்ள காலகட்டமல்ல.

"வாரம்தோறும் புதன்கிழமை அன்று அமைச்சரவை கூடுகிறது. அப்போது கொரோனா நெருக்கடி குறித்து மட்டுமல்லாமல்,  நாட்டின் நிர்வாகம், நிதி மேலாண்மை, மக்கள் நலன் நிதி, பாதுகாப்பு, கல்வி, அனைத்துலக உறவுகள் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள இதர விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

"கொரோனா பெருந்தொற்று மேலாண்மையில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களின் நல்வாழ்வுக்கென பல்வேறு விதமான உதவிகளையும் உரிய அமைச்சுகள் மற்றும் முகமைகள் மூலம் அரசு அளித்து வருகிறது.

"பொருளாதார ஊக்கத் தொகுப்புகள் நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் அண்மையில் அறிவிக்கப்பட்ட 40 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள Permerkasa plus  தொகுப்பும் ஒன்றாகும்,"  என பிரதமரின் முதன்மை தனிச்செயலாளர் டத்தோ Marzuki Mohamad தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset