
செய்திகள் மலேசியா
தலைவர்கள் மாமன்னரை சந்திப்பதன் பின்னனி என்ன?
கோலாலம்பூர்:
நாட்டின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார் மாமன்னர்.
இதன் முடிவில் தற்போது அமலில் உள்ள மூன்றாவது முழு அளவிலான முடக்க நிலை MCO 3.0 நீட்டிக்கப்படுமா அல்லது 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஒருவேளை நடப்பில் உள்ள அரசாங்கமே பெருந்தொற்று ஆபத்து வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும்வரை ஆட்சியில் நீடிக்குமா எனும் கேள்விகளும் எழுந்துள்ளன?
இத்தகைய சூழ்நிலையில் நேற்று மாமன்னரைச் சந்தித்துப் பேசியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம். அப்போது, அவசரகாலத்தை நீட்டிக்க வேண்டாம் என மாமன்னரிடம் தாம் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசினும் மாமன்னரை சந்தித்துப் பேசியுள்ளார். இந் நிலையில் மசீசவின் வீ கா சியோங், பாஸ் கட்சி துணைத் தலைவர் ஆகியோரும் மாமன்னரைச் சந்தித்து உள்ளனர்.
இந்தச் சந்திப்புகள் குறித்து மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm