
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கிருமித்தொற்றுக்கு 79 பேர் பலி: ICU-ல் 911 பேருக்கு சிகிச்சை
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு மேலும் 73 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,684ஆக அதிகரித்துள்ளது.
இத்தகவலை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்று தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாடு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போர் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 462 பேருக்கு சுவாச உதவி அளிக்கப்படுகிறது.
தற்போது நாட்டில் 79,848 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் அன்றாட பாதிப்பு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm