நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திடீரென மகாதீரை தொடர்புகொண்ட அன்வார்: பின்னணி என்ன?

கோலாலம்பூர்:

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தம்மை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசியதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மாமன்னருடனான சந்திப்புக்கு முன்பு இருவரும் பேசிக் கொண்டதை இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அவர் உறுதி செய்தார்.

"அன்வார் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய எந்தவொரு பரிந்துரையும் அவரால் முன்வைக்க இயலவில்லை என்று தோன்றியது.

"அவசரநிலை தொடர்பாக மாமன்னரை சந்திக்கும் பொருட்டு அவர்கள் ஒரு கூட்டு மனுவை அளிக்க வேண்டும். நான் அவ்வாறு மாமன்னருக்கு மனு அனுப்பினேன். ஆனால் அன்வார் எழுதினாரா என்பது தெரியாது.

"மாமன்னர் எனது கடிதத்துக்கு பதிலளித்திருந்தார். அதேசமயம் என்னை மட்டுமல்லாமல் இதர அரசியல் தலைவர்களையும் பார்க்க விரும்புவதாக அவர் தமது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்," என்றார் துன் மகாதீர்.

அன்வார், மகாதீர் இடையேயான உரையாடலில் முக்கியத்துவம் வாய்ந்த எதுவும் இல்லை என்றே கருதப்படுகிறது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் துன் மகாதீர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இடையே அதிக சந்திப்புகள் நிகழவில்லை. மாறாக, அவ்வப்போது மகாதீர் சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவை அன்வார் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை அளித்து வருகிறது.

இந் நிலையில்  நீண்ட நாடகளுக்குப் பிறகு இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset