
செய்திகள் மலேசியா
907 தனி நபர்கள் மீது நடவடிக்கை: லாபுவானில் நுழையத் தடை நீட்டிப்பு
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் SOPகளை கடைபிடிக்காத 907 தனிநபர்கள் புதன்கிழமையன்று தடுத்து வைக்கப்பட்டதாக மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 877 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் கைதானதாகவும், இருவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமையன்று முகக்கவசம் அணியாத 208 பேர் பிடிபட்டுள்ளனர். ஏதேனும் வளாகங்களுக்குள் நுழையும்போது உரிய தகவல்களைப் பதிவு செய்யத் தவறியதாக 148 பேர் சிக்கியுள்ளனர். போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என 123 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் மாநிலங்களுக்கு இடையே அனுமதியற்ற சட்டவிரோத பயணம் மேற்கொள்வது தொடர்பில் 147 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. வாகனங்களில் அதிகமானோர் செல்வது கேளிக்கை நிகழ்வுகளை நடத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே லாபுவானில் பயணிகள் நுழைவதற்கான தடை இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கிறது எனவும் அவர் கூறினார்.
அங்கு பயணிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அத்தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.