
செய்திகள் தொழில்நுட்பம்
அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கான தடை நீங்கியது; டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்
வாஷிங்டன்:
டிக் டாக், வி சாட் செயலிகளை தடை செய்வதற்கான முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவை ரத்து செய்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
சீன செயலிகளான டிக் டாக், வி சாட் போன்றவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், அவற்றிற்கு தடை விதித்தார். புதியதாக இந்தச் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே டிரம்ப்பின் ஆணைக்கு நீதிமன்றங்கள் தடை விதித்தன. இந்த நிலையில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவுகளை நீக்கி தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அதே வேளையில் டிக் டாக், வி சாட் போன்ற சீன செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா? என்பதை கண்காணிக்கும் படியும் பைடன் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm