
செய்திகள் விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மகளிர் இறுதிப்போட்டியில் கிரெஜ்சிகோவா-பாவ்லியூசென்கோவா மோதல்
பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரெஜ்சிகோவா-பாவ்லியூசென்கோவா மோதுகின்றனர். நேற்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியா பாவ்லியூசென்கோவாவும், ஸ்லோவேனியாவின் தமரா ஷிடன்செக்கும் மோதினர்.
இதில் பாவ்லியூசென்கோவா 7-5, 6-3 என நேர் செட்களில் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 2ஆவது அரையிறுதிப் போட்டியில் செக். குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவும், கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியும் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப் போட்டியில் கிரெஜ்சிகோவா கடுமையாக போராடி 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். 2ஆவது செட்டை சக்கரி 6-4 என எளிதாக வசப்படுத்தினார். 3ஆவது செட்டில் இருவரும் அனல் பறக்க மோதிக் கொண்டனர். கேம்களை மாறி, மாறி பிரேக் செய்தனர்.
அந்த செட்டில் மேட்ச் பாயின்ட் கிடைத்தும், சக்கரி நழுவ விட்டார். இறுதியில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த செட்டை 9 : 7 என்ற கணக்கில் கிரெஜ்சிகோவா வென்று, பைனலுக்கு தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கிரெஜ்சிகோவா 4ஆம் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பைனலுக்கு முன்னணி வீராங்கனைகள் யாரும் தகுதி பெறவில்லை. மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 31ஆம் இடத்தில் உள்ள அனஸ்டாசியா பாவ்லியூசென்கோவாவும், 33ஆம் இடத்தில் உள்ள பார்போரா கிரெஜ்சிகோவாவும் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். இருவருக்குமே இது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பைனல்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:18 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
September 18, 2025, 10:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am