நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட் -19 நிலவரம்: இன்று 84 உயிரிழப்புகள்: மொத்த இறப்பு எண்ணிக்கை 3,768. ICU 912. வென்டிலேட்டர் 458

புத்ராஜெயா: 

மலேசியாவில் கோவிட் 19 தொற்றுக்கு இன்று 84 பேர் இறந்துள்ளனர், இதனுடன் சேர்த்து அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 3,768 ஆக உயர்ந்து உள்ளது என்று சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ்  கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "சிலாங்கூரில் இன்றும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. சிலாங்கூரில் மட்டும் 19 பேர் இறந்திருக்கிறார்கள்.

"சரவாக்கில் 12 பேரும், நெகிரி செம்பிலனில் ஒன்பது பேரும்  லாபுவனில் எட்டு பேரும், ஜொகூர் மற்றும் கோலாலம்பூறில் தலா ஏழு பேரும் பஹாங் மற்றும் சபா தலா ஆறு பேரும் திரெங்கானு மூன்று பேரும், மலாக்காவில் இருவரும்  கிளந்தான், பேராக், பினாங்கு, பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் இன்று காலமானார்கள்.

"இறப்புகளில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

"லாபுவான் மருத்துவமனையில் இறந்த 27 வயது இளைஞன் தான் குறைந்த வயதுடையவர். அவருக்கு வேறெந்த நோயின் அறிகுறியும் இல்லை.

"தற்போது, ​​தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 912 ஆகும். இன்றைய இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். இதுவரை இல்லாததும் ஆகும்.

"வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் நோயாளிகள் 458 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."

இவ்வாறு சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம்தெரிவித்தார், 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset